சீரமைப்போம் தமிழகத்தை என்கிற முழக்கத்துடன் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசாரத்தை தடையுடன் தலைவர் கமல்ஹாசன் எதிர்கொள்ளவேண்டியதாக இருந்தது.
அரசு வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்திருந்த மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்குச் சில இடங்களில் மட்டும் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்த்த தலைவனின் துணையோடு வெற்றியை நோக்கி நடைபோடுவோம்.எதுவும்_தடையல்ல என்று என்ஜினீயர் முருகானந்தம் பதிவு செய்திருந்தார்.
அதற்கு கமல்ஹாசன் “பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது. பாதை பழசு. பயணம் புதிது. வெற்றி நமதே! #எதுவும்_தடையல்ல”என்பதாக பதில் சொல்லியிருக்கிறார்.
இன்று தன்னுடைய டிவிட்டர் தளத்தில் பிரதமருக்கு ஒரு பதிவு போட்டிருக்கிறார் கமல்.
“சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?
பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே….?” என கேட்டிருக்கிறார் .
#மதுரையில்_ஆண்டவர்#எதுவும்_தடையல்ல pic.twitter.com/P4foj2XIl4
— Mathan K5 (@Muralli13224943) December 13, 2020
தென்னாட்டு வேங்கை தான் ஒத்திக்கோ ஒத்திக்கோ.. #மதுரையில்_ஆண்டவர் pic.twitter.com/1JdBUZ0thE
— Cupid Buddha 🧘🏿♂️ (@CupidBuddha) December 13, 2020