“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் இன்று கமல்ஹாசன் மதுரையில் தனது முதல்கட்ட பிரசாரம் தொடங்கியுள்ளார். சென்னையில் இருந்து இன்று பகல் 12.15 க்கு விமானம் மூலம் மதுரை சென்றுள்ள கமல்ஹாசன், இன்று மாலை கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் பெண்கள் அமைப்பினருடன் நடக்கும் கலந்துரையாடலில் பங்கேற்கிறார். இதையடுத்து தொழில் முனைவோருடன் கமல் நடத்தும் ஆலோசனை நிகழ்ச்சி நடக்கிறது.இந்த 3 கூட்டங்களும் தனித்தனியாக உள்அரங்குகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாளை காலை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.தொடர்ந்து,திண்டுக்கல், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் சில இடங்களில் மக்கள் மத்தியில் பேசுகிறார். நாளை மறு நாள் 15-ம் தேதி திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ள உள் அரங்க கூட்டங்களில் பங்கேற்கிறார்இதையடுத்து 4 வது நாளான வரும் 16-ந்தேதி கன்னியாகுமரியில் கிராமம், கிராமமாக பிரசாரம் மேற்கொள்ளும் அவர் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.