நடிகர் ரஜினிகாந்த் இன்று ‘அண்ணாத்த ‘படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஹைதராபாத் ராமோஜிராவ் நகரில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. பட்டு வேட்டி சட்டையுடன் முதல் நாள் படப்பிடிப்புத் தொடங்கியது.
அவரது அரசியல் பிரவேசம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதால் மிகவும் பாதுகாப்புடன் வேகம் வேகமாக காட்சிகளை படமாக்கிவருகிறார்கள். அவரை பத்திரிகையாளர்கள் நெருங்கிவிடாதபடி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
ரஜினியை அவரது மகள் சவுந்தர்யா மட்டும் இன்று சந்தித்துப் பேசினார்.
மகளுடன் சில முக்கிய விவரங்களை ரஜினி பகிர்ந்து கொண்டிருக்கலாம்.அதனால்தான் இந்த ரகசிய ஆலோசனை என்கிறார்கள்.