மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிற படம் ‘மாமனிதன்.’
சீனுராமசாமி இயக்கியிருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு. இசையும் இவரே.
இன்னொரு தனி சிறப்பும் இருக்கிறது .மகனுடன் இணைந்து தந்தை இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.
படம் தயாராகி ரெடியாக இருந்தாலும் அபிராமி மெகா மால் நிறுவனம் வெளியிட தடை வாங்கியிருந்தது.
’மாமனிதன்’ திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் அபிராமி மெகா மால் வாங்கி இருப்பதாகவும் , விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் ‘என்று கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா தரப்பில், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர் ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.