‘கடன் அன்பை முறிக்கும்’ என்று வணிக தளங்களில் போர்டு வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் “இன்று ரொக்கம்,நாளை கடன்’என்று சாமர்த்தியமாக எழுதி வைத்திருப்பார்கள்.
ஆனால் கடன் உறவுகளையே முறித்துப்போடும் என்பதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. குடிசை வீட்டிலிருந்து மாடி வீடு வரை எவரும் விதிவிலக்கல்ல.
தனுஷ் மட்டும் விதி விலக்காக முடியுமா?
ரஜினியை வைத்து சில வருடங்களுக்கு முன் நடிகர் தனுஷ் தனது உண்டர் பார் நிறுவனம் மூலம் பா.ரஞ்ஜீத் இயக்கத்தில் ‘காலா’ எனும் திரைப்படத்தை தயாரித்தார்.
அவ்வளவாக அந்த படம் ஆதாயத்தை தரவில்லை. ‘காலா’ படத்தினால் சுமார் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஆகிவிட்டதாம்.
இதனால் ரஜினிக்கும், தனுஷுக்கும் அப்போது இருந்தே பேச்சு வார்த்தை பெரிதும் இல்லாமல் இருக்கிறதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். ரூ. 30 கோடி நஷ்டத்தை, மற்ற திரையுலக தயாரிப்பாளர்களிடம் இருந்து கடன் வாங்கி அடைத்தாராம் நடிகர் தனுஷ்
அந்த கடனை அடைக்க தடுமாறிய தனுஷ், அதுக்கு பதிலாக தனது கால் ஷீட்டை ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் தந்துவிட்டாராம்.திரையுலகில் இதுதான் ஹாட் தகவல்.! இதனால்தான் ரஜினியின் பிறந்த நாளுக்கு தனுஷ் வாழ்த்து சொல்லவில்லை என்கிறார்கள்