நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருக்கிற கட்சியின் பெயர் ,தேர்தல் சின்னம் பற்றி நாம் நேற்று ஒரு பதிவு போட்டிருந்தோம்.
நம்மைப்போலவே இதர ஊடகங்கள் ,சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியை ரஜினி மக்கள் மன்றம் சுதாகர் மறுக்கவில்லை என்றாலும் அதிகாரபூர்வமாக அறிவிப்புவரை காத்திருங்கள் என்று சொல்லி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
உண்மை என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
மக்கள் சேவை கட்சி, என்பது புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாது.. ஏற்கனவே, அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்திருக்கிறார்கள். அதை பதிவு செய்த நபர், மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் அதை மாற்றம் செய்ய இரண்டரை மாதங்கள் முன்பு கோரிக்கை விடுத்து, அது தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்பாடா ,ஒரு சிக்கல் தீர்ந்தது.ஆனால் ரஜினிக்கு பாபா முத்திரைதான் சின்னமாக வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருக்கிறது. அது கிடைக்க வில்லை என்றால் ஆட்டோ சின்னத்தை கேட்டுப்பெறலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறார் என்கிறார்கள். மக்கள் சேவை கட்சி விட்டுக்கொடுக்குமா?தேர்தல் கமிஷன் ஒப்புக்கொள்ளுமா?