மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
அவருக்கு செஞ்சியில் பேசுவதற்கு போலீஸ் தடை விதித்திருக்கிறது. இது வரை இல்லாத அளவுக்கு கமலுக்கு மட்டும் பல இடங்களில் பேசுவதற்கு தடை விதித்திருக்கிறார்கள்.
இன்று அவரது இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் பற்றி அவர் கூறி இருப்பதாவது,
“ஜெகஜீவன் அவென்யூவில் ஜீவநாடியான நீர்நிலைகளும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழும் கடற்கரைப் பகுதிகளும் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த உரையுடன் எனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டேன். ஆயிரம்_கைகள்_கூடட்டும் சீரமைப்போம்_தமிழகத்தை
உண்ணவும் அருந்தவும் கொடுத்து ஊர்திகளில் அழைத்தாலும் வராத கூட்டம், ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்குக் கூடுவதைப் பார்த்து வயிறு எரிகிறதோ? அதனால்தான் செஞ்சியில் பேச நமக்குத் தடைகள் வருகிறதோ? எது வரினும் நில்லோம், அஞ்சோம். !
நாப்பிளக்க வாய்ச்சழக்கு பேசுகின்ற தலைவர்காள்!
மக்கள் நீதி மலரும் போது எந்தப் பக்கம் ஓடுவீர்?