
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி மிக பெரிய கண்டன ப்பேரணி நடந்தது.
அந்தப் பேரணியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி சம்பவத்தில் படுகாயமடைந்த பொதுமக்களை ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசியபோது,”தூத்துக்குடி போராட்டத்தில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதுதான் நடந்தது ,தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்” என கூறியிருந்தார்.
இதற்கு பல தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இந்த ஆணையம் செயல்பட்டு வந்தது .இவ்வழக்கில் 556 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டது
ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ” உடல்நிலை நேரில் ஆஜராக முடியாத அளவில் ரஜினியின் நிலைமை இருக்கிறது ” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் ஜனவரி 19ஆம் தேதி ரஜினிகாந்த் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது .
இதற்காவது நேரில் ஆஜராவாரா என்பது தெரியவில்லை.




