பரந்து, விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டிலும், அங்கே ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களிலும் தேன் எடுத்து பிழைப்பு நடத்துகிறவன் வேலு ( தருண் குமார் )
, அதே மலை கிராமத்தில் கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பு நடத்துபவள் பூங்கொடி ( அபர்ணதி ),
இருவருக்கும் காதல்.
ஆனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதைப்போல சிலர் சட்டம் சம்பிரதாயம் என்பதைக் காட்டி பயமுறுத்துகிறார்கள்.
இருவரும் அந்த மலைக்கிராமத்தின் சடங்குகளையும் ,சம்பிராதயங்களையும் மீறி காதல் கல்யாணம் செய்து கொள்கின்றனர்.
சில காலம் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது வாழ்க்கைப் பயணத்தில் நடக்கும் ஒரு துயரம், டிஜிட்டல் இந்தியாவின் சுயரூபத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.
மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவும் உரிமைகள் நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றால், அதிகாரிகளை வழிநடத்தும் ஆளுமை அரசுக்கு வேண்டும். இல்லையென்றால், என்ன நடக்கும் என்பதை முரண்பாடுகளுடன் படமாக்கியிருக்கிறார்கள்.
இருந்தாலும் பாராட்டப்பட வேண்டிய தகுதிகள் அதிகம் உள்ள படம்.இயக்குநர் கணேஷ் விநாயக் தன்னுடைய முந்தைய படங்களை விட ‘தேன் ‘படத்தில் அதிகமாக சமூக அவலங்களை குட்டியிருக்கிறார் ,வாழ்த்துகள் .கணேஷ்
ஆதார், ரேஷன், இலவச காப்பீட்டு அட்டைகள் மற்றும் அரசு மருத்துவ மனைகளின் அவலட்சனத்தை அப்பட்டமாக படமாக்கியிருக்கிறார்கள். தேர்தல் காலம் .எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நடித்த அனைவரும் தேனி மாவட்ட மலை கிராமத்தின் வட்டார மொழியினை அழகாக பேசி நடித்திருக்கிறார்கள். வசனம் படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான அம்சம். டப்பிங் கலைஞர்கள் மிகப்பெரும் பாராட்டுக்கு உட்பட்டவர்கள்.
நாயகன் தருண்குமார், நாயகி அபர்ணதி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி நாயகியின் தந்தையாக வரும் ‘கயல்’ தேவராஜ் உள்ளிட்ட அனைவரும் கதைக்கேற்ப நன்றாக நடித்துள்ளனர்.
‘பாவா’ லெட்சுமணன் அரசாங்கத்தின் திட்டங்களையும், அரசு அதிகாரிகளின் அடாவடித்தனத்தையும் தன்னுடைய சிரிப்பின் ஏவுகனைகளால் சீற வைத்திருக்கிறார்.
இந்த மாதிரியான படங்களை வரவேற்க வேண்டும்!