ஐதராபாத்தில் “மே டே” என்ற இந்திப் படத்தில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,”எனக்கு (கோவிட் 19) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனால் நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் நலமாக இருக்கிறேன். சிறிது நாட்கள் ஓய்வுக்கு பின் விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்.
என்னை சந்தித்த அனைவரும் அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.நன்றி, அனைவரும் பத்திரமாக இருக்கவும்
எனக் கூறியுள்ளார். ராகுல் தமிழில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.