அஷ்வின், ஷிவதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. நாளடைவில் நாயகிக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது. எவர் கண்களுக்கும் தெரியாத சில ஆன்மாக்களின் உலகமும் இவர் கண்களுக்கு தெரிகிறது.. இதுபோன்ற ஒரு புரியாத கனவுலகம் இவரின் இறந்து போன அம்மாவிற்கும் இருந்திருக்கிறது.இந்த புதுவித அனுபவம் ஒரு நாள் முற்றி அந்த உலகத்திற்கே போகிறார் ஷிவதா. ஆனால் இது தெரியாத அஸ்வின் அவரை தேடி அலைகிறார்? அதன்பின்னர் அவர் எப்படி கண்டுபிடித்தார்? அது என்ன மாய உலகம்? அதற்கும் நம் உலகத்திற்கும் என்ன தொடர்பு என்பதே இந்த ஜீரோ. ஒரு இயக்குனராக சொல்லவரும் கருத்தை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி இயக்க வேண்டும் என்பதை இயக்குனர் புரிந்து கொள்ள வேண்டும். முதல் பாதியில் படத்தை பார்ப்பவர்களுக்கு எரிச்சலூட்டும்படியான காட்சிகளை வைத்து நகர்த்தி இருக்கிறார். பிற்பாதி ஆதாம் ஏவாள் காலத்திற்கே நம்மை அழைத்து சென்று புதுப் பேய்க்கதையை காதில் சுற்றுவதால் ஏற்கனவே நாம் குழம்பிய நிலையில் சோர்வடைந்து , தள்ளாடி,தள்ளாடி தியேட்டரை வெளியே வருவதற்குள் நமக்கு தாவு தீர்ந்து விடுகிறது மக்க..ழேஏஏ…………….