திலகா ஆர்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜிபி கார்த்திக் ராஜா படத்தொகுப்பில் கார்த்தீஸ்வரன், அர்ஜுன், காயத்ரி ரமா, நியதி, கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேய் இருக்க பயமேன்…
இந்தத் திரைப்படம் கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.. மறையூரில் காட்டிற்கு இடையில் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் இந்த முழு படமும் படமாக்கப்பட்டது.
ஜோஸ் பிராங்கிளின் இசையில் சைந்தவி அவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளார்..
காஞ்சனா திரைப்படத்திற்கு சவுண்ட் எபெக்ட்ஸ் செய்த சி.சேது அவர்கள் இத்திரைப்படத்திற்கு சவுண்ட் எபெக்ட்ஸ் செய்துள்ளார்.
வரும் ஜனவரி 1 அன்று இப்படம் திரைக்கு வருகிறது