ரஜினிகாந்த் ,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரும் பலமான பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறார்கள். இவர்களை யாரும் வெளியார் சந்திப்பதற்கு ராமோஜி ராவ் படப்பிடிப்பு நிலைய நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
குறிப்பாக 69 வயதாகிவிட்டதால் கொரானா தொற்று சுலபமாக தொற்றிக்கொள்ளும் என்பதால் ரஜினிக்கு தனியான பாதுகாப்பு ஏற்பாடுகள்.
அண்ணாத்த படப்பிடிப்பு முடியும் வரை படப்பிடிப்புக்குழுவினர் எவருக்கும் ராமோஜிராவ் நகரை விட்டு வெளியில் செல்ல அனுமதி கிடையாது.
தன்னுடைய அரசியல் கட்சியைப் பற்றிய அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பதாக இருக்கிறது.
அறிக்கையாக வெளியிடுவாரா அல்லது செய்தியாளர்களை அழைத்து அறிவிப்பாரா, கேள்விகள் கேட்பதற்கு அனுமதி உண்டா என்பதெல்லாம் இன்னும் விளக்கமாக தெரியவில்லை.
தேர்தல் பிரசாரம் பிப்ரவரியில் தொடங்குகிறது.
இதே படப்பிடிப்பு நகரில் விக்னேஷ் சிவனின் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. விக்னேஷ் சிவனும் அங்குதான் இருக்கிறார் .ஆனால் காதலர்கள் தனித்தனி ஹோட்டலில் ! சந்திக்க முடியவில்லை..பாவம்தான்.!