படப்பிடிப்பு கொரானா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது.
ரஜினிகாந்த் அவசரமுடன் படப்பிடிப்பு வேலைகளை முடித்துக்கொண்டு அரசியல் கட்சி வேலைகளில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் ஆண்டவன் நினைப்பு வேறு விதமாக இருந்திருக்கிறது. படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டான். ஆன்மீக அரசியல் நடத்துவதற்கு அபசகுனமாக இருக்கிறதே என்று சிலர் பேசத்தொடங்கி விட்டனர்.
ரஜினி சென்னை திரும்பினாலும் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனென்றால் எட்டு பேருக்கு கொரானா என்கிறார்கள்.