அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்த தற்போது ஹைதராபாத் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கொரானா இருக்குமா என்பதற்காக அனுதினமும் சோதனை செய்யப்பட்டாலும் லேசான காய்ச்சல் இருந்தது.
தற்போது அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை குறிப்பு அறிவிக்கிறது. அவர் முன்னதாக வெளிநாட்டில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டதை அவரே அறிவித்திருக்கிறார்.
தற்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் .மற்றபடி எதுவுமில்லை.
ஆனாலும் அவருக்கு நல்ல ஒய்வு தேவை.
இந்த நிலையில் அவரது புதிய அரசியல்கட்சி திட்டமிட்டபடி அறிவிக்கப்படுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள்.