எழுத்து,இயக்கம்: இந்திரஜித் லங்கேஷ் , ஒளிப்பதிவு : சந்தோஷ் ராய் பதாஜே , இசை: வீர சமர்த்த , மீட் ப்ரோஸ் ,
ரிச்சா சத்தா (ஷகீலா.) பங்கஜ் திரிபாதி ( சலீம்.) எஸ்தர் நோரான்கோ ( சுஹானா )
**************
ஒரு காலத்திய கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கையைத் தழுவிய கதை எனச்சொல்லி இந்திக்காரர்கள் தங்களின் கைவரிசையை காட்டியிருக்கிற டப்பிங் படம்.
கேரளாவை சேர்ந்தவர் ஷகீலா .குடும்ப வறுமை காரணமாக சினிமாவில் சேர்ந்து சீரழிந்ததாக கதை சொல்கிறது.இசுலாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்.
படத்தின் முக்கிய வில்லன் கேரளத்தின் உச்ச நடிகர் .
அவரின் பெயர் சலீம். அநேகமாக மம்மூட்டியை நினைவூட்டுகிறார்களோ என்னவோ! ஏனென்றால் அவரின் பெயர்தான் முன்னர் அடிபட்டது.ஷகீலாவுக்காக அந்த சூப்பர் ஸ்டாரை மட்டமாக காட்டவேண்டுமோ அந்த அளவுக்கு காட்டியிருக்கிறார்கள்.யாரை குளிப்பாட்ட என்பது தெரியவில்லை.
கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் பார்வையை தன்னுடைய அங்கங்களின் பக்கமாக திருப்பி பரபரப்பு உண்டாக்கியவர் ஷகீலா . ஆபாச படங்களின் இருப்பிடமாக ஒரு காலத்தில் கேரளம் இருந்தது.
ஷகீலாவின் மீதான அந்த எண்ணத்தை மாற்றுவதற்கு இந்த படம் முயற்சிக்கிறது. முகம்தான் ஷகீலா.பாடி வேறொரு நடிகையினுடையது என்பதாக பதிவு செய்கிறது.
அந்த எண்ணத்தை மாற்றுவதற்கு கதாசிரியர்கள் ,நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
ஷகீலாவை சிலுக்கு அறைந்ததாக சொல்லுவதும் ,ராங்கியாக சித்தரித்திருப்பதும் இழிவான செயல்.!
கதையில் ஷகீலா .சலீம் என இரண்டு கேரக்டர்களும் சுற்றி ,சுற்றி வருவதால் போதுமேடா சாமி என்கிற சலிப்பு வருகிறது!
நமது பொறுமையை சோதிக்கிறாள் இந்த ஷகீலா!