கடந்த பிப்ரவரி மாதம் மறைந்த இயக்குநர் சாச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற மலையாள திரைப்படம், ‘ அய்யப்பனும் கோஷியும்’. அதில் காவல் துறை அதிகாரி அய்யப்பன் நாயரின் உயர் அதிகாரியாக நடித்தவர் அனில் நெடுமாங்கட். (வயது 48.)
இவர் தனது நண்பர்களுடன் கேரளா மாநிலம் தொடுபுழாவில் உள்ள மலங்காரா அணையில் குளிக்கும் போது போது எதிர்பாராத விதமாக சூழலில் சிக்கி,நீருக்குள் மூழ்கி பலியானார்.நடிகர் அனில் நெடுமாங்கட் உயிரிழந்த செய்தி மலையாளத் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.