அண்ணாத்த படப்பிடிப்புக்கு சென்ற ரஜினிகாந்துக்கு உடல் நிலை திடீரென மாற்றம் அடைந்தது. படப்பிடிப்பில் இருந்த 8 பேருக்கு கொரானா என்பதால் படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
லேசான காய்ச்சல் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருக்கும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் .
அங்கு அவருக்கு உயர் அழுத்த ரத்தம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
நேற்று இரவும் அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லை. கவனமுடன் அவரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவர் எப்போது சென்னை திரும்பலாம் என்பதை இன்று இரவுதான் முடிவு செய்வார்கள்.
அநேகமாக திங்கட்கிழமை திரும்பலாம். அவர் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் ஆலோசனை .
டாக்டர்களின் அறிவுரையை மீறி 31 ஆம் தேதி கட்சி பற்றிய அறிவிப்பில் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.
எல்லாம் அந்த பாபாஜியின் கையில் இருக்கிறது. விரைவில் நலம் பெற நாமும் வேண்டுவோம்.