ஐதராபாத்தில் நடந்த “அண்ணாத்த” திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்து ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தனிமை படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ரஜினிகாந்தின் உடல்நிலையில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவருக்கு முழுமையான ஒய்வு தேவை படுவதாகவும்,இதனால் ரஜினிகாந்தை முழுமையான ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்லதாவும்,அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் , ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியளவில் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு எடுக்கப்பட்ட பல்வேறு பரிசோதனை முடிவுகளில் உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் அவருக்கு அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. இன்னும் பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்’’ எனத்தெரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ரஜினிகாந்த் இன்னும் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுப்பார் என்றும், அதன் பிறகே அவர் டிஸ்சார்ஜ் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.