ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் ,மெகா ஸ்டார் ,முன்னாள் மத்திய மந்திரி என்றெல்லாம் பாராட்டப்படுகிறவர் சிரஞ்சீவி.
பத்து வருடம் அரசியல் அனுபவம். காங்கிரஸ் கட்சியில் இருந்தார் .என்ன காரணமோ தெரியாது.
“வேணாம்யா ,அரசியல்” என்று ஓடி வந்து விட்டார்.
மீண்டும் அரசியலுக்கு வருவாரா ?
கேள்வி கேட்டவர் நடிகை சமந்தா .
பதில் சொல்கிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
“எனக்கு அரசியல் பொருந்தவில்லை. என்னுடைய மனநிலைக்கு அரசியல் ஒத்து வராது. என்னுடைய வாழ்நாளில் அரசியலுக்கு இனி இடமில்லை. நான் பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.அடுத்த பிறவியிலும் அரசியல் வேண்டேன்.” என்கிறார்.
“உங்களின் தம்பி பவன் கல்யாண் அரசியல் கட்சித் தலைவராக இருக்கிறாரே?”
“அவர் அரசியலில் அதிக அளவில் முயற்சி செய்கிறார்.தன்னை நிரூபித்துக்கொள்ள அதிக அளவில் பாடுபடுகிறார். அவர் முயற்சியில் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை பொறுத்த அளவில் மெகா ஸ்டாராகவே தொடர்வேன் ” என்கிறார் சிரஞ்சீவி.