தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள சூர்யா, மிகவும் நம்பிக்கையுடன் இழந்த தன மார்கெட்டை தக்கவைத்து கொள்ளும் விதமாக மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் படம் ’24’ இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு இடியாப்ப சிக்கல் வந்து சேர்ந்துள்ளதாம்.இப்படத்தை சூர்யாவின் ‘2D நிறுவனம் தயாரித்திருந்தாலும், ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோகிரீன் நிறுவனம்தான்வெளியிடவுள்ளது.. இந்நிலையில் சூர்யாவின் முந்தைய படமான ‘மாஸ்’ படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.ஆனால், இந்த படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கோரிக்கையை விநியோகஸ்தர்கள் இன்று வரை அந்நிறுவனத்திடம் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் ‘மாஸ்’ படத்திற்கான நஷ்ட ஈட்டை தந்தால் மட்டுமே ’24’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்றும், இல்லாவிட்டால் ’24’ படத்துக்கு ரெட் கார்ட் போட்டுவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். திடீரென பூதாகரமாக எழுந்துள்ள இப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று சூர்யா மற்றும் ஞானவேல்ராஜா அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது./