ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் கிடைத்த சின்னத்திரை நிகழ்ச்சியில்,நடிகை ஓவியாவை தேவையில்லாமல் சீண்டி, அவரது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளானார்.அதே சமயம் சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்து வந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களின் மீதும் ஆர்வம் காட்டி வரும் பிக்பாஸ் ஜூலி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.இந்நிலையில், விதவிதமான போஸ்களில் தனது கவர்ச்சியான நிழல் உருவ படங்களை பதிவு செய்துள்ளார்.இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.