தமிழில், பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களை இயக்கிய சுசி கணேசன், தற்போது மெகா பட்ஜெட் படமாக வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக்க உள்ளார் என்கிறார்கள்.
தமிழகத்தின் சிவகங்கைப் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் அதாவது, 1780 முதல் 1789 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தவர், வீரமங்கை ராணி வேலுநாச்சியார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் அரசியான இவர், இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
வீர மங்கை வேலு நாச்சியாராக நடிக்க நடிகை நயன்தாரா மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதால், அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.