பிரசாத் ஸ்டூடியோ நிறுவனத்துக்கும் இசைஞானி இளையராஜாவுக்குமான பிணக்கு தீர்ந்த பாடாக இல்லை.
தனக்கு இழப்பீடு வேண்டும் என்று கோர்ட்டு வரை சென்றிருந்தார் இளையராஜா.
ரிக்கார்டிங் ஸ்டுடியோ இருந்த இடத்தில் தியானம் செய்ய விரும்புவதாக கோர்ட்டை நாடியிருந்தார்.
வழக்கினை வாபஸ் வாங்கினால் சமரசமாக போகலாம் என்கிற ரீதியில் பிரசாத் ஸ்டுடியோ நிறுவனம் நீதிமன்றத்தில் சொன்னதின் பேரில் இன்று திங்கட்கிழமை தன்னுடைய வழக்குரைஞர்களுடன் அங்கு செல்வதாக இருந்தார்.
ஆனால் கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கேள்விப்பட்ட இளையராஜா தன்னுடைய தியானத் திட்டத்தை கைவிட்டு விட்டார்.
இவருக்காக காலையில் இருந்தே ஸ்டுடியோவுக்கு வெளியில் காத்திருந்த தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பிவிட்டார்கள் .பத்திரிகையாளர்கள் யாரையும் ஸ்டுடியோ நிறுவனம் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.