விஜய் நடிக்கும் படம் வெளியாகிறபோதெல்லாம் அவருக்கு குடைச்சலில்தான் முடிகிறது.
பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதாக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் தற்போதைய கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைப்படி 100 சதவீத ஆடியன்ஸை தியேட்டருக்குள் அனுமதிக்க முடியாது.
இந்த கடுமையான கட்டுப்பாடு மாஸ்டர் படத்தின் கலெக்சனை பாதிக்கும் என்பதால் அதை தளர்த்தக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் ,தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
நிலைமையை எடுத்து சொல்லி மனு ஒன்றையும் கொடுத்திருக்கிறார்கள்.