ஆந்திராவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ,தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
முன்னவர் கட்சி ஆரம்பித்து கூட்டங்களைக் காட்டினார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.
பின்னவர் வருகிற 31 ஆம் தேதி புதிதாக கட்சி ஆரம்பிக்கவிருக்கிறார். வருகிற சட்டப்பேரவை தேர்தல் தான் அவரது கட்சியைப் பற்றிய கணக்கினை காட்டும் .
இவர்கள் இருவரைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா அவரது கருத்தினை வெளியிட்டிருக்கிறார்.
“ஆந்திராவில் என்.டி .ராமராவ் ,தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆகிய இருவரைப்போல பவன் கல்யாண் ,ரஜினிகாந்த் இருவரும் அரசியலில் வெற்றி பெற முடியாது.
சினிமாவிலேயே நடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதே அவர்களுக்கு நல்லது.அரசியலில் வெற்றி பெறலாம் என எந்த நடிகரும் நினைத்து விடக்கூடாது “என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.
ஓகே தலைவா! நாளைக்கு உங்கள் கட்சி கூட்டு சேராமல் இருந்தால் சரி!!!!