இருவருமே கேரளத்தை சேர்ந்தவர்கள்.
டெலிவிஷன் தமிழ் சீரியல்களில் தமிழ் நடிக ,நடிகையரை விட பிற மாநிலத்தவரே பெரும்பான்மையாக நடிக்கிறார்கள்.
தற்போது ஒளிபரப்பாகிவரும் கண்ணானே கண்ணே சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர் ராகுல் ரவி .மலையாள சீரியல் பொன்னம்பிலி என்கிற தொடரில் நடித்தவர்.இவரது காதலி லட்சுமி எஸ்.நாயர்
லட்சுமி எஸ்.நாயர் என்பவரை காதலித்து நேற்று கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்.
“முதலில் பார்த்தபோது எனக்கு அது சாதாரணமான நாளாகவே இருந்தது.
ஆனால் தொடர்ந்து சந்திக்கவே நாளுக்கு நாள் எனக்குள் ஒரு மாற்றம். தனித்துவமாக இருப்பதை உணர்ந்தேன்.
அவள் எனக்கானவள். அவளது அழகிய சிரிப்பில் மயங்கினேன். அவள் சாதாரணப்பெண் அல்லள் !
அவள் என் வாழ்க்கை. என்னுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்ற வந்த லட்சுமிக்கு நன்றிகள். ஏராளமான காதலுடன்” என கவிதை பாடிவிட்டார் ராகுல் ரவி.
வாழ்க மணமக்கள் !
படத்தில் இருப்பது லட்சுமி இல்லை கண்ணான கண்ணே சீரியல் நடிகை.