பா.ஜ .க . வை சேர்ந்த இயக்குநர் பேரரசு எழுதிய கவிதை இது.
எங்களால் முடிந்த அளவு எழுத்துப் பிழைகளை தவிர்த்திருக்கிறோம் .
நீங்கள்
அரசியலுக்கு
வரவேண்டும்
என்று ஆசைப்பட்டோம்!
இன்று
அந்த ஆசையை
ஆலோசிக்கிறோம்!
நீங்கள்
ஆன்மீக அரசியல்
என்கிறீர்கள்!
தமிழ்நாட்டில்
அரசியல் அஸ்திவாரமே
இறை இழிவுதான்!
எளிமையான
நேர்மையான
அரசியல்
காமராஜரோடு
சமாதியாகிவிட்டது!
நீங்கள்
தமிழக விசுவாசத்தில்
சேவை செய்ய
ஆசைப்படுகிறீர்கள்
இங்கு
தமிழ் மொழி வேஷந்தான்
போற்றப்படுகிறது!
நீங்கள்
யார்மனதும் புண்படாமல்
பேசுபவர்!
ஆனால் இங்கே
விமர்சனம்
என்ற பெயரில்
உங்கள் மனசு
குத்திக் கிழிக்கப்படுகிறது!
நல்லவர்கள்
அரசியலுக்கு வரவேண்டும்
என்று நினைத்தோம்!
அரசியலுக்கு வந்து
நல்லவர் அசிங்கப்படக்கூடாது
என்று
இன்று நினைக்கிறோம்!
ஒருசில கட்சிக்கு
சில கட்சிகளே
எதிர்ப்பாய் இருக்கும்,
இங்கு உங்களுக்கு
ஒட்டுமொத்த கட்சிகளும்
எதிரியாக கிளம்பிவிட்டது!
இதுவே
நீங்கள் அரசியலில்
வெற்றியடைந்ததற்கு அடையாளம்!
கட்சி ஆரம்பிக்காமலே
கோடானகோடி தமிழர்கள்
உங்களை
தலைவராக ஏற்று
‘தலைவா’ என்று
அழைக்கப்பட்டீர்
அதுவே எங்களுக்குப் போதும்!
இப்பொழுது
இங்கு
நல்ல அரசியல்வாதிதான் தேவை!
நல்ல மனிதரல்ல!
நீங்கள்
மனிதனை மனிதனாக மதிக்கும்
நல்ல மனிதர்!
ரசிகர்களின்
விருப்பத்தைவிட,
சிலரின் ஆசையைவிட
உங்களின் நிம்மதியும்,
உடல்நலமும் முக்கியம்!
அரசியல்
ஒரு சூழ்ச்சி சுழல்
இறங்குவதற்கு முன்
சிந்தியுங்கள்!
—பேரரசு