ஆரம்பத்திலிருந்தே சிலர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லிவந்தார்கள்.
ஆனால் ரஜினிமக்கள் மன்றத்தினரை கூட்டி “கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் .இப்போது இல்லை என்றால் எப்போதுமே இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் “என பலத்த கையொலியுடன் சொன்னார் .
ஆனால் அவருக்கு சிறு நீரக மாற்று சிகிச்சை நடந்திருக்கிற செய்தியை ஒரு அனாமதேய கடிதம் வழியாக வெளியிட செய்து பின்னர் அந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை ஆனால் அந்த அறிக்கையில் இருப்பதெல்லாம் உண்மைதான் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அப்போதே சிலர் சந்தேகப்பட்டார்கள் . ஆனால் அவரது அருகில் இருந்தவர்கள் கட்சி ஆரம்பிப்பார் என்பதை ஊடகங்கள் மத்தியில் சொல்லிவந்தார்கள். அதை நம்பி ஊடகங்களும் பரப்பி வந்தன.மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி வந்தார் .ரஜினி வழியாக பாஜகவை கால் ஊன்ற செய்துவிடலாம் என்று நம்பியது. ஆனால் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம். ரஜினியை வைத்து அரசியல் செய்யப்பார்த்த தமிழருவி மணியனுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.
ஆனால் அவரது அறிக்கையை பாருங்கள்.