தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துவிட்டார் ரஜினி. இதற்காக விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தனது சூழ்நிலையை விளக்கிவிட்டு, ரசிகர்களிடமும், தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஜினியின் அரசியல் விலகல் முடிவை வரவேற்று பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகையும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“அன்பார்ந்த ரஜினிகாந்த், உங்கள் முடிவு ஒவ்வொரு தமிழரின் இதயத்தையும் நொறுக்கியுள்ளது. ஆனால், உங்கள் ஆரோக்கியம் மற்றும் நலனை விட வேறு எதுவும் முக்கியமல்ல.உங்கள் நலநில் அக்கறையுள்ள ஒரு தோழியாக உங்கள் முடிவுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு மிகவும் விசேஷமான, முக்கியமான மனிதர் . ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்”.இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்..