நடிகர் ரஜினி தனது அரசியல் கட்சி முடிவினை தெளிவாக அறிக்கை வழியாக சொல்லியிருப்பதை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள்.
அவரது ரசிகர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் அரசியல் ஈடுபாடு காட்ட விரும்பியவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இணைந்து கொண்டு தங்களுடைய ரசிகத் தன்மையை மட்டுமே ரஜினியில்பால் காட்டலாம்.
தற்போது கஸ்தூரி தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
அதில் தைரியமும் இணைந்தே காணப்படுகிறது.
“எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான்.
எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம்.
வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.
இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை !
கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.
ரஜினியின் முடிவுக்கு பாராட்டுகள்.
நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்.”