லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஷாந்தனு பாக்யராஜ் என பெரும் நடிகர் பட்டாளமே திரண்டு நடித்துள்ளது.
வரும் ஜனவரி 13-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மாஸ்டர் படத்தின் கதையே இது தான் என்றும், இப்படத்தின் ரன்னிங் டைம் ம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் என்றும் Synopsis வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, மது பழக்கத்திற்கு அடிமையான பேராசிரியர் விஜய், சிறுவர் சீர்திருத்த பாலி ஒன்றுக்கு பனி நிமித்தமாக 3 மாத காலம் அனுப்பி வைக்கப்படுகிறார்.
அங்கு கேங்ஸ்டர் விஜய்சேதுபதி சிறுவர்களை வைத்து சட்ட விரோத காரியங்களில் ஈடுபடும் விஷயம் விஜய்க்கு தெரிய வருகிறது.இதையடுத்து விஜய்,விஜய்சேதுபதி இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது இதையடுத்து அங்கு என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதையாம்.