புத்தாண்டு பிறக்கும்போது சிலருக்கு ஞானோதயம் பிறந்துவிடும்.
கடந்த கால தவறுகளை நினைத்து வருத்தப்பட்டு இனிவரும் காலங்களில் அவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன் என உறுதி எடுத்துக்கொள்வார்கள்.
ஆனால் சில மாதங்கள் கூட அந்த உறுதிமொழி உயிருடன் இருப்பதில்லை. மரணித்து விடும்.
எனக்கு தெரிந்த சில நடிகர்கள் குடிப்பதில்லை என உறுதி எடுத்து விட்டு மறு வாரமே கோப்பையை ஏந்திவிட்டார்கள்.
அதைப்போல ஆகிவிடுமா அமலாபாலின் உறுதி மொழி?
அப்படி என்ன எடுத்துக்கொண்டிருக்கிறார்.?
“என்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளப்போகிறேன்.அதற்காக ஆயுர்வேதா மருத்துவ சிகிச்சை.!
என் ஈகோவை விட்டொழித்து புனிதமுடன் ஐக்கியம் ஆகப்போகிறேன்.
குண்டலினி மகா யோகா என்னுடன் இருக்கிறது.
நான் வலியிலிருந்து தப்பிக்கவிரும்பவில்லை.அது என்னை பாதிக்கட்டும்.
அந்த வலியின் வேதனையிலிருந்து அதிகமாக கற்றுக்கொண்டிருக்கிறேன்.
எனது கடந்த கால வாழ்விலிருந்து அதிகமாக கற்றுக்கொண்டிருக்கிறேன்.நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்!”என்பதாக சொல்லியிருக்கிறார் அமலா பால்.