வாழ்க்கையில் ஏற்படும் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது.
அப்படிப்பட்ட முதல் காதலை ஒரு பையன் எப்படி பெறுகிறான் என்பதை உணர்வு
பூர்வமாக சொல்லும் படமாக உருவாகி வருகி றது ‘பையன்’ என்கிற படம்.
இந்தப் படத்தை ஏ.டி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலு மலர்வண்ணன்.
பி.எஸ்.ராகுல் இசையமைப்பாளராக அறிமுகமாக சாய்சூராஜ் சந்திரசேகர்
ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு சேவியர் திலக். பாடல்களை மதுராஜ்,
சாகுல், வேணுஜி, நெல்லைபாரதி ஆகியோர் எழுதுகின்றனர்
இந்தப் படத்தில் புதுமுகங்கள் பைசல்கான், ராகவி நாயகன் நாயகிகளாக
அறிமுகமாக, இவர்களுடன் பசங்க சிவக்குமார், எம்.எஸ்.பாஸ்கர், அனுமோகன்,
வடிவுக்கரசி, லலிதா, செந்தி, சித்தன் மோகன், மாஸ்டர் உதய், சந்துரு
‘விஜிபி’ கோவிந்தராஜ், சேலம் பழனிவேல் கவுண்டர், உமா சங்கர், விஜய்
கணேஷ், ரஞ்சன், புலிப்பாண்டி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருத்துறைப்பூண்டி, வடசங்கந்தி, சேலம்,
ஈரோடு, பவானி, ஊராட்சிக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது