இன்று உலகம் முழுவதும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து அனைவரும் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ணக்கோலங்கள் போட்டு புது வருடத்தை வரவேற்றுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் புத்தாண்டு வாழ்த்துகள் கூறும் கோலம் போடப்பட்டு உள்ளது. இந்த கோலம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலா கி வருகிறது .
இந்த கோலத்தில் ரோஜாவுடன் இரட்டை இலை இருப்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி தனது மறைமுக ஆதரவை அதிமுகவுக்கு தெரிவிப்பதாக உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.மய்யத்தில் இருக்கிற கோலம் தாமரை போன்று இருப்பதாகவும் சொல்கிறார்கள்.