இயக்குநர் வேலு பிரபாகரன். தமிழ்ச்சினிமாவின் வித்தியாசமான முகம்.
கடவுளை மறுப்பார். பின்னர் திருச்செந்தூர் சென்று சிவனின் மைந்தனை வணங்குவார்.
புதுமை விரும்பி என்பதை காட்ட தன்னை விட வயதில் மிகவும் குறைந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வார்.
சினிமாவில் இருக்கிற முரட்டுத்தனமான சிந்தனையாளர். இவரது அடுத்த படத்தில் நடிப்பதற்காக நடிகையை தேடி அலைந்தது பற்றிய முக நூல் பதிவு.
‘’எனது படத்தில் எந்த நடிகையும், புது முகமாக இருந்தாலும் நடிக்க மறுப்பது வேடிக்கை, பல நேரங்களில் வேதனை தருகிறது,
இத்தனைக்கும் ஒரு பரட்சிக்காரனை தேடி பிடிக்கும் பெண் ஐபிஎஸ் வேடம் .
ஒரு வருடமாக பலரை கேட்கிறேன் நெருங்கி வந்தாலும் கடைசியில் ஹூம்,
இந்த நாடும் இங்கே மலிந்து இருக்கும் காமடி விமர்சகர்களும், முட்டாள் சினிமாக்காரன்களும், அறிவற்ற ஊடகங்களும் செய்து வைத்து இருக்கும் வேலை.
நான் ஆபாச படம் எடுக்கும் இயக்குனர் என்பதை பரப்பி இருப்பது.. பரவாயில்லை
பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்க துணிந்து விட்டால் எல்லாவற்றையும் எதிர் கொள்ள வேண்டியதுதான்.
அருமையான புரிதல்கள் கொண்ட கவிதா அவர்கள் இணைந்து இருக்கிறார்..Kavitha .. and .saif..We wil rock..’”என்று எழுதியிருக்கிறார்,
இவர் ஒரு மாதிரி!