விஜய் நடித்து வருகிற 13 ஆம் தேதி வெளியாக இருக்கிற ‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு புதிதாக சிக்கல் முளைத்திருக்கிறது.
என்னடா இது எந்த பக்கம் போனாலும் அணை கட்டுறாய்ங்களே என்கிற விநியோகஸ்தர்களின் விசும்பல் சத்தம் தான் கேட்கிறது.
“என்னங்க அந்த விசும்பல்?”
அதாவது அரசாங்கம் இன்னும் தியேட்டர்களின் இருக்கைகள் குறித்த சலுகையை அளிக்கவில்லை.
புதிய கரோனா பரவல் காரணமாக இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்பது மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. இதனால் 100 சதவீத இட ஒதுக்கீடு என்பது சாத்திய மில்லை.
என்ன செய்வது?
இதுமட்டுமல்ல!
மினிமம் கியாரண்டி என்பதை இந்த நேரத்தில் ஒத்துக்கொண்டால் கையை சுட்டுக்கொள்ள வேண்டியதாகிவிடும். அதனால் வசூலின் சதவீத அடிப்படையில் மாஸ்டர் படத்தை வெளியிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். எம்.ஜி.உடன்படிக்கையின்படி அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளர் திருப்பித் தரவேண்டியதில்லை.
இது தயாரிப்பாளர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.அவர்களே சொந்தமாக படத்தை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கலெக்சன் ஏரியாவான சென்னை செங்கல்பட்டு,கோவை ஆகிய மூன்றை சேர்ந்த விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.