பல வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர்,ஜெயலலிதா நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற பட த்தின் தலைப்பிலேயே ,செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா ஆகியோரது நடிப்பில் 2010-ஆம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் வெளியானது.
இந்நிலையில் இப்பட த்தின் 2 ம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் நேற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, இப் படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.
இதையடுத்து திரையரங்கு உரிமையாளர் ரூபன் என்பவர் தனது ட்விட்டர் பதிவில் “ஆயிரத்தில் ஒருவன் என்ன ஒரு மாஸ்டர்பீஸ், காலத்தை வென்ற ஒரு திரைப்படம். ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியம். டியர் செல்வராகவன் சார், தயவு செய்து இந்த காவியத்தின் இரண்டாவது பாகத்தை எடுங்க .இப்படத்தில் ஜிவி பிரகாசின் பின்னணி இசை நெருப்பு மாதிரி இருக்கு ” என்று கூறியிருந்தார்.
இப்பதிவை செல்வராகவனுக்கு டேக் செய்து இருந்தார் இருந்தார்.இந்நிலையில் அவரின் ட்வீட்டுக்கு செல்வராகவன், “மிக்க நன்றி. ஆம்.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ கண்டிப்பாக இயக்குவேன்” என்று பதிலளித்துள்ளார்.மற்றொரு பதிவில் ஆயிரத்தில் ஒருவன்-2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ,” இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால் “2024 என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இப்பதிவை நடிகர் தனுஷ்’ ரீ’ டுவிட் செய்து அதில்,”ஒரு பெரிய வேலை !! முன் தயாரிப்பு மட்டும் எங்களுக்கு ஒரு வருடம் ஆகும். ஆனால் மாஸ்டரிடமிருந்து ஒரு கனவு படம், காத்திருப்பு நீண்டதாக இருக்கும். ஆனால், அதையெல்லாம் மதிப்புக்குரியதாக மாற்றுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுப்போம். AO2 .. இளவரசர் 2024 இல் திரும்புகிறார் என பதிவிட்டுள்ளார்.ஆக 2024 -ல் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 ம் பாகம் உருவாக உள்ளது உறுதியாகியுள்ளது.