அனைவராலும் கே.பி.பிலிம்ஸ் பாலு என்று அழைக்கப்பட்டவர் பாலு.
சரத்குமார் ,பிரபு ,ஆகியோரை வைத்து பல வெற்றிப்படங்களை தயாரித்தவர்.
சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி இவரது தயாரிப்பு .
விழா கொண்டாடிய சின்ன தம்பி இன்றளவுவரை மறக்க முடியாது.
சில தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்து வந்திருக்கிறார் .அண்மையில் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தமிழ்ச்சினிமாவில் இந்த புத்தாண்டில் நிகழ்ந்திருக்கிற முதல் இழப்பு.
நல்ல தயாரிப்பாளர் ஒருவர் இன்று நம்மிடையில் இல்லை.