பிரபல தொழிலதிபர் வசந்தகுமார். கொரானாவில் இருந்து தப்பினாலும் மரணம் அவரை கொண்டு சென்றுவிட்டது. காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
இவரது மறைவுக்குப் பின்னர் மகன் விஜய் வசந்த் அரசியலுக்கு வர விரும்புவதாக அறிவித்தார்.
இவரது பெரியப்பா குமரி அனந்தன் பழுத்த தேசியவாதி.காங்கிரஸ் கட்சி.பெருந்தலைவர் காமராஜரின் பேரன்பினை பெற்றிருப்பவர்.
விஜய்வசந்த் திரைப்பட நடிகராகவும் இருக்கிறார். வெங்கட் பிரபுவின் குழுவில் இவரும் ஒருவர்.
இவரை தமிழக காங்கிரசின் பொதுச்செயலாளராக நியமித்து களம் இறக்கியிருக்கிறது. இவருக்கு வாழ்த்துகளை கூறிவருகிறார்கள்.இளைஞர்கள்.