உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 2021 புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அப்பதிவில் அவர் கூறியுள்ளதாவது,’ அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இப்போது நாம் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத கட்டத்தை கடந்து விட்டோம். அதேபோல் மறக்கமுடியாத 2021 ஆண்டை நோக்கி முன்னேறுவோம். சிறந்த தருணங்கள், வெற்றி மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், அமைதி, திருப்திமற்றும் அன்பு ஆகியவற்றுடன் இந்த அற்புதமான 2021 ஐ நோக்கி செல்லும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்