ஈஸ்வரன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது,
“முதலில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்த கலைஞர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இந்த படம் எப்படி விரைவாக முடிந்தது என்று. ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் பாதியில் நின்றது. அந்த சமயத்தில் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று இப்படத்தின் கதையை கூறினார் இயக்குநர். இப்படத்தின் கதையைக் கேட்டதும், கொரோனாவால் அனைவருக்கும் எதிர்மறையாக, மனைஉளைச்சலில் இருக்கும் சமயத்தில் இப்படத்தின் கதை நேர்மறையாக இருந்தது. ஆகையால், இப்படம் பார்க்கும் அனைவருக்கும் நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.. அதனால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
என்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். அனைவரும் உங்கள் உள்ளத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவரிடம் அறிவுரைக் கேட்பதை நிறுத்துங்கள். உங்கள் உள்ளத்தில் தான் இறைவன் இருக்கிறான். அதைதான் நான் செய்தேன்.
கொரோனா காரணமாக சிலர் திரையரங்கில் வெளியிடுகிறார்கள், சிலர் ஓடிடியில் வெளியிடுகிறார்கள். அது அவரவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் சினிமா என்றால் தியேட்டரில் பார்ப்பது தான் சுகம். அதனால் இப்படம் தியேட்டரில் தான் வரும்.
‘ஒஸ்தி’ படத்திற்கு தமன் இசையமைத்தார். இரவு பகலாக போனிலேயே பேசி பணியை முடித்துக் கொடுத்தார். நந்திதா ஸ்வேதா, நிதி அகர்வாலுக்கு நன்றி.
பாரதிராஜா அப்பாவை பார்க்கும்போது எனக்கு பெரிய சக்தி கிடைத்தது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். இப்படத்தில் எனக்கும் பாலசரவணனுக்கும் நல்ல வைபரேஷன் இருக்கும்.ஒளிப்பதிவைப் பார்க்கும்போது தெய்வீகமாக இருக்கிறது. வசனம் நன்றாக எழுதியிருக்கிறார்.என் ரசிகர்களுக்கு ஒன்று கூற ஆசைப்படுகிறேன். இனிமேல் பேசுவதற்கு எதுவுமில்லை செயல் மட்டும் தான்.இந்த வருடத்திலேயே 3 படங்கள் வரப்போவதாக கூறினார்கள். அது உண்மைதான். ‘மாநாடு’, ‘பத்து தல’, அதற்கடுத்து ஒரு படம் இருக்கிறது. சுசீந்திரன் சார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.