சமூக வலைதளங்களின் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 52 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில்,கடந்த டிசம்பர் 31ம் தேதி நடிகை தீபிகா படுகோனேவின் சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் முழுவதும் திடீரென நீக்கப்பட்டது.
இதையடுத்து, தீபிகாவின் அக்கவுன்ட் முடக்கப்பட்டதா? என ரசிகர்கள் குழம்பித் தவித்த நிலையில், ஆடியோ டைரி ஒன்றை வெளியிட்டுள்ளார் தீபிகா. அதில், அதில், 2020ம் ஆண்டு பலருக்கும் நிச்சயமற்ற தன்மை கொண்ட ஆண்டாகவே இருந்தது என நினைக்கிறேன்.
அதே சமயம் பலருக்கும் நன்றி சொல்லும் ஆண்டாகவும் இருந்தது. இந்த 2021ம் ஆண்டு அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் தீபிகாவின் வலைதளபக்கங்கள் முடக்கப்படவில்லை.புதிய தொடக்கத்தை நாம் தொடங்க வேண்டும் என்பதற்காக பழைய நினைவுகளை அழித்துள்ளார் . என நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.