தன்னை புரட்சிகரமான கொள்கைவாதி என்பதாக அடையாளப் படுத்திக்கொள்பவர் இயக்குநர் வேலு பிரபாகரன்.
கருப்புச்சட்டைப் போட்டுக்கொள்பவர்கள் எல்லாருமே தந்தை பெரியாரின் கொள்கை பிடிப்புள்ளவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.
தந்தை பெரியாரைப் போல் தாடி விடுகிறவர்கள் தாகூராகவும் முடியாது .ஈரோட்டு புனிதராகிவிடவும் முடியாது.
அண்மையில் விமர்சகர்கள்.ஊடகங்கள் ,சினிமாக்காரர்கள் ஆகியோரை இழிவான சொற்களால் காயப்படுத்தியிருந்தார்.
விமர்சகர்கள் காமெடியன்களாம்.
சினிமாக்காரர்கள் முட்டாள்களாம்.
ஊடகங்கள் அறிவற்றவையாம்.
இப்படி கையில் கழிவினை எடுத்து வீசியிருந்தார்.
காரணம் இவரை ஆபாசப்பட இயக்குநர் என்பதாக அவர்கள் அடையாளப்படுத்திவிட்டதால் இவரது புதிய படத்துக்கு யாருமே நடிப்பதற்கு முன் வரவில்லை என்பது குற்றச்சாட்டு.
தற்போது கவிதா என்கிற நடிகை முன்வந்திருப்பதாக மகிழ்ந்திருக்கிறார்.
கவிதா என்கிற அந்த நடிகையின் படங்களையும் வெளியிட்டிருந்தார்.
அந்த நடிகை யார்? ஆபாச படங்களில் நடித்திருப்பவர் கவிதா பாபி.