ஒருவரை உள்ளே தள்ளுவதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறது.!
மத்திய அமைச்சர் அமித் ஷாவை தாக்கி பேசினார், இந்து கடவுள்களை விமர்சித்தார் என புகார் சொன்னால் உடனே நடவடிக்கை எடுத்துவிடுகிறார்கள்.
பிரபல நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூகி.
இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.ஸ்டான்ட் அப் காமெடியனாகவும் உள்ள இவர் பல்வேறு பகுதிகளில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
பொது மேடைகளில் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தூரில் ஒரு காமெடி நிகழ்ச்சியை நடத்தினார். அந்நிகழ்ச்சியில், இந்து கடவுள்கள் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. முனாவர் ஃபாரூகி மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ மாலினி லட்சுமணன் சிங் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் போலீசில் புகார் அளித்தார்.
சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோவும் சமர்பிக்கப்பட்டது . இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் முனாவர் ஃபாரூகியை கைது செய்தனர். அவருடன் எட்வின் அந்தோணி, பிரகார் வியாஸ், பிரியம் விகாஸ், நளின் யாதவ் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கோவிட்-19 விதிமுறைகளை மீறியது, மத உணர்வை தூண்டுதல், கவனக்குறைவான செயலால் தொற்றுநோயை பரப்ப காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.