தமிழக அரசு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், விஜய்யின் ’மாஸ்டர்’, சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அதே நாளில் தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் புதிய படத்தின் டீசர் ஒன்றும் வெளியாக உள்ளது .
கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் டீசர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கி விட்டது என செல்வராகவன் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்த டீசர் வரும் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் தலைப்பும் விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்