சுகாசினி மணிரத்தினம்,ரேவதி,ரம்யா நம்பீசன் ஷோபனாஉள்ளிட்ட 9 பிரபல நடிகைகள் இணைந்து திருப்பாவையின் முதல் பாசுரம் பாடியுள்ளனர்.
இது குறித்து நடிகை சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளதாவது,” தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை இன்றைய இளைய சமுதாயத்திற்கு மறு அறிமுகம் செய்யும் முயற்சியாக, திருப்பாவையின் முதல் பாசுரம் கடந்த வருடம் ரவி வர்மாவின் ஓவியங்களை நம் தென்னிந்திய (நடிகைகள்) பெண்களுடைய படங்களுடன் உருவாக்கியதைப் போலவே இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் அதாவது நான் (சுகாசினி) உமா பத்மனாபன் ,ரேவதி , நித்ய மேனன், ரம்யா நம்பீசன் , அனு ஹாசன் , கனிகா , ஜெயஶ்ரீ ஷோபனா ஆகிய 9 நடிகைகள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம்.
இந்த பாடலை பெரும்பாலோர் எங்கள் தொலைபேசியிலேயே பாடி பதிவு செய்தோம். ஒளிப்பதிவு பகத் மற்றும் பாடகிகளும் தங்கள் தொலைபேசியிலேயே ஒளிப்பதிவு செய்தனர் என்கிறார் நடிகை சுகாசினி மணிரத்னம்!