‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சஞ்சிதா ஷெட்டி,தனக்கு பொருத்தமான கதைகளை மட்டும் தேர்வு செய்து, தமிழ் மற்றும் கன்னடம், மலையாள மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ‘சூது கவ்வும்’ படத்திற்கு பிறகு பெரிதாக அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் பெரிதாக அமையாததால்,தற்போது அதிரடியாக கவர்ச்சியாக நடிப்பதென முடிவெடுத்து,தேவதாஸ் பிரதர்ஸ் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகிவரும் பார்ட்டி ஆகிய படங்களில், இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி திரைப்படத்தில் இதுவரை காட்டிடாத அளவிற்கு படு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.