முதல்வர் எடப்பாடியின் உறுதி மொழியை நம்பி ஆளுக்காள் பாராட்டு மாலைகளை போட்டு அசரடித்தனர்.
100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி என்று அரசாணை வெளிவந்தது.
இந்த உத்திரவு இன்னும் திரும்பப்பெறவில்லை .இந்நிலையில் மத்திய அரசு எடப்பாடி அரசுக்கு இரட்டைத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது,ஒரு கடிதத்தின் வழியாக.!பாராட்டிய பெருமக்கள் தலை கவிழ்ந்துவிட்டார்கள்.
” தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்?. மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்” என சராமாரி கேள்விகளை கேட்டு, மத்திய அரசு உள்துறை செயலாளர் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இது போதாது என்று 100 சதவீத இருக்கை ஒதுக்கீட்டை திரும்பப்பெறக்கோரி நீதி மன்றத்தில் வழக்கும் பதிவாகி இருக்கிறது.
“கவலைப்படாதீங்க. உள்துறை செயலாளர் கடிதம்தானே…எப்படியாவது எடப்பாடியார் சமாளித்துவிடுவார்” என்று சில அமைச்சர்கள் சமாளித்துவருகிறார்கள் தயாரிப்பாளர்களை!
மாஸ்டர் படத்தயாரிப்பாளர் “யாரை நம்புவது ?எப்படி சமாளிப்பது ?அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிப்போச்சே “என்கிற கவலையில் இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் தரப்பினர் கோபத்தில் இருக்கிறார்கள்.
எப்படித்தான் பொங்கலை சமாளிக்கப்போகிறார்களோ மாஸ்டர் விஜய் தரப்பினர்?
ஆனாலும் இன்னும் ஒரு வாரம் இருக்கிறதே ,ஏதாவது பலன் இருக்காதா என்கிற புதிய முயற்சியில் தயாரிப்பாளர்கள் இறங்கியிருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் “சரிக்கட்டி விடலாம்”என்கிற சலுகை இருக்கிறவரை தீர்வு கிடைக்காமல் போகாது என்கிற நம்பிக்கை நமக்கும் இருக்கிறது.!