அவள் ஒரு துணை நடிகை, நடனமாடுகிற பெண்.தெலுங்கு பெண்.
தயாரிப்பாளர்,நடிகர் ,இயக்குநர் ,டான்ஸ் மாஸ்டர்,ராகவேந்திரா பக்தர் ,ரஜினிகாந்தின் பாசத்திற்குரியவர் என்கிற பன்முகம் கொண்ட லாரன்ஸ் மாஸ்டரின் தம்பி எல்வின் என்கிற வினோத் மீது கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.
“கடுமையான விளைவுகளை சந்திக்கநேரிடும் என மிரட்டுகிறார்” என்பதாக கண்ணீர் வடித்தபடி சொல்லியிருக்கிறார்.
அந்த பெண்ணுக்கு 29 வயது.
பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர் “தெலங்கானா போலீஸ் அதிகாரிகள் சிலரின் பின்பலத்துடன் கடந்த ஆறு ஆண்டுகளாக என்னை துன்புறுத்திக்கொண்டிருக்கிறார். எல்வின் மீது மாரெட்பள்ளி போலீசில் புகார் கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை.
என்னுடைய சினிமாத் தொழிலுக்கு தொல்லைகள் கொடுக்கிறார்.என் மீது விபசார புகார் கொடுத்து 21 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியதாகி விட்டது.
போலீஸ் ஏ .சி.பி.ரவீந்தர் ரெட்டி துணையுடன் எல்லாமே நடக்கிறது.
நான் தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆருக்கு புகார் கடிதம் எழுதியிருக்கிறேன்” என்பதாக அந்த நடிகை கூறி இருக்கிறார். இந்த புகாருக்கு எல்வின் ,லாரன்ஸ் மாஸ்டர் இருவரும் இதுவரை எவ்வித மறுப்பும் சொல்லவில்லை.